இங்கிலாந்து வீரர்களின் விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஜெய்ஸ்வால் 209
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ஓட்டங்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் 209 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஜஸ்பிரித் பும்ராவின் புயல்வேக பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
தெறிக்கவிட்ட பும்ரா
குறிப்பாக ஓலி போப் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் ஸ்டம்புகளை பும்ரா தெறிக்கவிட்டார். இதில் ஸ்டோக்ஸ் அவுட் ஆனதும் விரக்தியடைந்து பெவிலியன் திரும்பினார்.
அதிரடியாக விளையாடிய அவர் 54 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்கள் எடுத்தார். அபாரமாக பந்துவீசிய பும்ரா 45 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 253 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்த நிலையில் பும்ரா ஓவரில் இங்கிலாந்து வீரர்களின் ஸ்டம்புகள் பறந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.