பொல்லார்டு அணியை பொளந்துகட்டிய தமிழர் செனூரன் முத்துசாமி!

97

 

தென் ஆப்பிரிக்க வீரர் செனூரன் முத்துசாமியின் அதிரடி ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல் அணி அபார வெற்றி பெற்றது.

SA20 தொடரின் 28வது போட்டியில் MI கேப் டவுன் மற்றும் பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் MI அணி முதலில் ஆடியது.

தொடக்க வீரர் ரிக்கெல்ட்டன் 35 (24) ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் வீரர்கள் சொதப்ப, வான் டர் டுசன் மற்றும் பொல்லார்டு அதிரடியில் மிரட்டினர்.

இதன்மூலம் MI அணி 163 ஓட்டங்கள் சேர்த்தது. வான் டர் டுசன் 46 பந்துகளில் 60 ஓட்டங்களும், பொல்லார்டு 16 பந்துகளில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 33 ஓட்டங்கள் விளாசினர்.

பிரிட்டோரியா அணியின் தரப்பில் கேப்டன் பர்னெல் 4 விக்கெட்டுகளும், அடில் ரஷீத் மற்றும் ஈத்தன் போஸ்ச் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பிரிட்டோரியா அணியில் தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த ரோஸோவ் (10), அக்கர்மென் (17) ஆகியோரும் சொதப்ப, வெர்ரின்னே அதிரடியாக 34 (22) ஓட்டங்கள் எடுத்தார்.

எனினும் 78 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் என பிரிட்டோரியா அணி தடுமாறிய நிலையில், தமிழர் செனூரன் முத்துசாமி-தேயூனிஸ் டி ப்ருயன் ருத்ர தாண்டவம் ஆடினர்.

இந்த கூட்டணியின் மிரட்டலான ஆட்டத்தினால் பிரிட்டோரியா அணி 19.4 ஓவரில் 167 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. தேயூனிஸ் டி ப்ருயன் 33 பந்துகளில் 42 ஓட்டங்களும், செனூரன் முத்துசாமி 18 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்களும் விளாசினர்.

 

SHARE