உங்கள் ஸ்மார்ட்போன் குறித்து இணையத்தில் உலா வரும் பல தகவல்கள் வெறும் கட்டுக்கதைகள் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஸ்மார்ட்போன் கட்டுக்கதைகள்
இந்தியாவில் பல கோடி மக்கள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு வந்துவிட்டனர், இந்தியர் ஒருவர் சுமார் 4.9 மணி நேரம் ஒரு நாளைக்கு சராசரியாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார் என்ற தகவல் கூறப்படுகிறது.
இந்நிலையில் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் குறித்த பல பொய்யான அல்லது கட்டுக்கதையான தகவல்கள் நம்மை சுற்றி உலாவி கொண்டு இருப்பது தவிர்க்க முடியாத உண்மை.
அதே சமயம் ஸ்மார்ட்போன் குறித்து இன்று கட்டுக்கதைகளாக மாறியுள்ள பல தகவல்கள், முன்பு உண்மையான தகவல்களாக இருந்தது என்பது உண்மை தான்.
ஸ்மார்ட்போன் தகவல்கள்
பொதுவாக ஸ்மார்ட்போன்களை இரவு முழுவதும் சார்ஜ் செய்தால் பேட்டரி பழுதாகிவிடும் என்று முன்பு கூறப்பட்ட தகவல் உண்மையான தகவல் தான்.
ஆனால் தற்போது ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் பல பாதுகாப்பு அம்சங்களை இணைத்துள்ளது.
இதன்மூலம் ஸ்மார்ட்போன்கள் 100% சார்ஜை அடைந்து விட்டால் சார்ஜ் செய்வதை நிறுத்திக் கொள்கிறது, அத்தோடு பேட்டரியின் பவரை ஏசி பவருக்கு மாற்றிவிடும், இதனால் எந்தவொரு பாதிப்பும் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு ஏற்படாது.
ஆனால் நீங்கள் சார்ஜ் செய்யும் போது உங்கள் ஸ்மார்ட்போன் துணியால் மூடப்பட்டோ, பெட்டிக்குள் அடைக்கப்பட்டோ இருந்தால் ஸ்மார்ட்போனின் வெப்பம் அதிகரித்து பேட்டரியில் பாதிப்பை ஏற்படுத்த கூடும்.
எனவே திறந்த வெளியில் உங்கள் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்து சிறந்த வழிமுறையாகும், அதைப்போல ஸ்மார்ட்போனகளை 15%கீழ் குறைய விடாமல் பார்த்து கொள்வது பேட்டரி திறனை பாதுகாக்க உதவும். எப்போதும் 85%க்கு மேல் ஸ்மார்ட்போனில் சார்ஜ் வைத்துக் கொள்வது சிக்கலுக்கு வழிவகுக்கும்.
இந்த வரிசையில், நீரில் நனைந்த ஸ்மார்ட்போன்களை அரிசியில் வைத்தால் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது, அது பகுதி அளவுக்கு உண்மை என்றாலும் முழுவதுமாக நனைந்த ஸ்மார்ட்போன்களை நீரில் வைப்பதால் எந்த பயனும் இல்லை.
அரிசியில் உள்ள ஸ்டார்ச் மற்றும் தூசி போன்றவை உங்கள் ஸ்மார்ட்போனை சேதப்படுத்துவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது.