லால் சலாம் படத்திற்கு தீடிர் தடை!! இப்படியொரு பிரச்சனையா?

67

 

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் வருகிற வருகிற 9-ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரதிலும், ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். நேற்று வெளியான லால் சலாம் படத்தின் ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தடை!!
இந்நிலையில் லால் சலாம் படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அது என்னவென்றால் லால் சலாம் திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி இருந்தாலும் அதில் இந்து – முஸ்லீம் மத பிரச்னையும் பிரதானமாக இருக்கலாம் என கருதி குவைத் நாடு இப்படத்திற்கு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE