மிகவும் பிட்டாக இருக்கும் விஜய் கடைபிடிக்கும் டயட் என்ன தெரியுமா?

68

 

நடிகர் விஜய் லியோ பட வெற்றியை தொடர்ந்து இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு ஒரகடம், பாண்டிச்சேரி என மாறி மாறி நடக்கிறது, படப்பிடிப்பு தளங்களிலும் ரசிகர்கள் விஜய்யை எடுத்த வீடியோக்கள் வைரலாகி வந்தன.

இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலாக உள்ள நிலையில் இதற்கு இடையில் விஜய் தனது அரசியல் எண்ட்ரி குறித்து அறிக்கை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

நடிகரின் டயட்
விஜய் எப்போதுமே பிட்டாக ஒல்லியாகவே காணப்படும் ஓரு பிரபலம்.

சரியான நேரத்தில் தூங்குவது, சரியான நேரத்தில் சாப்பிடுவது, தேவையான நேரத்தில் ஓய்வு எடுப்பது தான் அவரது பிட்னஸ் சீக்ரெட்டாம்.

அவர் படப்பிடிப்பில் இருந்தாலும், இல்லா விட்டாலும் இரவு ஏழு மணி ஆனால் இரவு சாப்பாட்டை முடித்து சிறிது நேரம் நடப்பாராம்.

அதே போல,தினமும் சரியாக 9.30 மணிக்கெல்லாம் தூங்கும் பழக்கத்தை வைத்து இருக்கும் விஜய், இந்த பழக்கத்தின் காரணமாக, நைட் ஷூட்டிங்கும், இரவு நேர பார்ட்டி, கெட்டுகெதர் நிகழ்ச்சி தவிர்த்து விடுவாராம்.

அசைவம் மிகவும் பிடிக்கும் உணவு என்றாலும் இப்போதெல்லாம் அதை தவிர்த்து வருகிறாராம். தோசை மிகவும் பிடிக்கும் உணவு, ஆனால் 2க்கு மேல் சாப்பிட மாட்டாராம்.

SHARE