தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய்.
ரஜினிக்கு பிறகு பாக்ஸ் ஆபிஸில் கலக்குவது நடிகர் விஜய்யின் படங்கள் தான், தனது சினிமா பயணத்தில் பீக்கில் இருக்கும் போதே நடிப்பை நிறுத்துவதாக விஜய் அறிவித்துள்ளது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை தொடர்ந்து விஜய் தனது 69வது பட வேலைகளில் இறங்க உள்ளார், இப்படத்தை யார் இயக்கப்போகிறார் என்பது பற்றி நிறைய பேசப்படுகிறது.
அடுத்தக்கட்டம் என்ன
தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை அறிவித்து சந்தோஷப்படுத்திய விஜய் இப்போது கேரளா பக்கம் சென்றுள்ளார். அங்கேயும் கால் பதிக்க விஜய் தீவிரமாக வேலை செய்வதாக கூறப்படுகிறது.