மணி ரத்னம் – சுஹாசினியின் திருமண புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத ஒன்று

67

 

இந்திய சினிமாவில் முக்கியமான ஒரு இயக்குனராக பார்க்கப்படுபவர் மணி ரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் தற்போது கமல் ஹாசனுடன் கைகோர்த்து துக் லைப் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். நாயகன் படத்திற்கு பின் மீண்டும் கமல் – மணி ரத்னம் கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ள நிலையில், கமலுடன் இணைந்து ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மணி ரத்னம் – சுஹாசினி
மணி ரத்னம் – சுஹாசினி நட்சத்திர ஜோடிகள் ஆவார்கள். இவர்கள் இருவரும் கடந்த 1988ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

இந்நிலையில், மணி ரத்னம் – சுஹாசினி இருவருடைய திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படங்கள் தற்போது படுவைரலாகி வருகிறது.

SHARE