அபாரமாக பந்து வீசி வரலாற்று சாதனை படைத்த பும்ரா! டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடம்

99

 

ஐசிசி-யின் டெஸ்ட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தரவரிசயைில் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா முதலிடம் பிடித்துள்ளார்.

9 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 2 -வது போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

இதில் 2-வது டெஸ்ட்டில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். அவர் முதல் இன்னிங்சில் 6 விக்கெட், 2 -வது இன்னிங்சில் 3 விக்கெட் என மொத்தம் 9 விக்கெட்டுகள் எடுத்தார்.

முதலிடம் பிடித்த பும்ரா
இதனால், ICC -யின் டெஸ்ட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தரவரிசயைில் முதல் இடத்தை பும்ரா பிடித்துள்ளார்.

இதனிடையே, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இதுவரை முதல் இடம் பிடித்தது இல்லை. தற்போது முதல் இடத்தை பிடித்த பும்ரா வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

SHARE