டேவிட் மில்லர் அணியை நொறுக்கிய பாப் டூ பிளெஸ்ஸிஸ்! விக்கெட்டுகளை சரித்த இருவர்

112

 

SA20 போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸை வீழ்த்தியது.

டேவிட் மில்லர் பொறுப்பான ஆட்டம்
ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இப்போட்டியில் பார்ல் அணி முதலில் ஆடியது. ஜோஸ் பட்லர் 10 ஓட்டங்களில் சாம் குக் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த வான் பியூரன் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதிரடி காட்டிய ஜேசன் ராய் 14 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 24 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டூ பிளெஸ்ஸிசிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் சாம் குக் மற்றும் பர்கர் பந்துவீச்சில் பார்ல் அணி விக்கெட்டுகளை இழந்து, 18.5 ஓவர்களில் 138 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

கேப்டன் டேவிட் மில்லர் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 47 (40) ஓட்டங்கள் எடுத்தார். குக் 4 விக்கெட்டுகளும், பர்கர் 3 விக்கெட்டுகளும், இம்ரான் தாஹிர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பாப் டூ பிளெஸ்ஸிஸ் அதிரடி
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஜோபர்க் அணியில் லீஸ் டூ ப்ளூய் மற்றும் கேப்டன் பாப் டூ பிளெஸ்ஸிஸ் அதிரடியில் மிரட்டினர்.

இந்தக் கூட்டணி 105 ஓட்டங்கள் குவித்தது. அரைசதம் கடந்த லீஸ் டூ ப்ளூய் 43 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து அரைசதம் விளாசிய பாப் டூ பிளெஸ்ஸிஸ் 34 பந்துகளில் 55 ஓட்டங்கள் விளாசினார். இதில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடங்கும்.

இவர்களின் அதிரடி ஆட்டத்தினால் 13.2 ஓவரிலேயே 139 ஓட்டங்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் ஜோபர்க் அணி அபார வெற்றி பெற்றது.

SHARE