Airtel மொபைல் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கலாம்., நிர்வாக இயக்குனர் சூசகம்

107

 

Bharti Airtel மொபைல் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கலாம் என தெரியவந்துள்ளது.

ஏற்கனவே கணிசமாக உயர்த்தப்பட்டுள்ள மொபைல் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று பார்தி ஏர்டெல் நிர்வாக இயக்குநர் கோபால் விட்டல் சூசகமாக தெரிவித்துள்ளார்.

திங்களன்று நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் வெளியிடப்பட்ட அறிக்கையில், முதலீட்டின் மீதான நிறுவனத்தின் வருவாய் இன்னும் குறைந்தபட்சம் 9.4 சதவீதமாக உள்ளது என்றும், தொழில்துறை ஆரோக்கியமாக இருக்க கட்டண உயர்வு முக்கியமானது என்றும் விளக்கப்பட்டது.

Airtel Mobile Tarrif may increase, Bharti Airtel Managing Director Gopal Vittal, Airtel Tarrif
டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 54 சதவீதம் அதிகரித்து ரூ.2,442 கோடியாக உள்ளது. வருவாய் 5.8 சதவீதம் அதிகரித்து ரூ. 37,899 கோடியாக உள்ளது.

இந்தியாவில் இந்நிறுவனத்தின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 7.5 சதவீதம் அதிகரித்து 39.7 கோடியாக உள்ளது. ஒரு பயனரின் சராசரி வருவாய் (APRU) 7.7 சதவீதம் அதிகரித்து ரூ. 193 முதல் ரூ.208 வரை உள்ளது.

SHARE