50MP கேமரா, LCD டிஸ்பிளே, 256GB மெமரி என பல அம்சங்களுடன் உள்ள ஸ்மார்ட் போனை பற்றி பார்க்கலாம்.
இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் தொடர்ந்து அசத்தாலான ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில், அப்படி ஒரு ஸ்மார்ட் போனை Infinix நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது, Infinix Hot 40i எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த போனானது அதன் வடிவமைப்பு, கேமரா மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரஉள்ளது. இதனுடைய சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அதனை பற்றி பார்க்கலாம்.
சிறப்பம்சங்கள்
Infinix Hot 40i ஸ்மார்ட் போனில் 6.56-inch HD+ LCD display, 90Hz refresh rate, 450 Nits brightness, 240Touch Sampling Rate in Hz மற்றும் பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. மேலும், இதில் உள்ள UNISOC T606 SoC சிப்செட் மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் வழங்கும்.
அதேபோல Android 13 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகிறது. அதோடு, ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக 8GB RAM மற்றும்256 GB ஸ்டோரேஜ் வசதி, கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.
கேமராவை பொருத்தவரை 50MP dual rear camera இருப்பதால் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதுமட்டுமல்லாமல், 5000mAh battery, 18W fast charging வசதியும் இதில் உள்ளது. அதேபோல் Side-mounted Fingerprint Scanner வசதியும் கொண்டுள்ளது.
dual SIM, USB Type-C port, 3.5mm headphone jack, GPS உள்ளிட்ட ஆதரவுகள் உள்ளது. இந்தியாவில் Infinix Hot 40i ஆனது ரூ.10,000-க்கு கீழ் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.