விராட் கோலி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்.. BCCI திடீரென வெளியிட்ட தகவல்

101

 

முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாடவில்லை என்ற நிலையில் BCCI புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

விராட் கோலி விளையாடவில்லை
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 2 -வது போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இதனால், இரு அணிகளும் 1-1 என சமனில் உள்ளது.

3 -வது டெஸ்ட் போட்டி வரும் 15 -ம் திகதி ராஜ்கோட்டில் தொடங்க உள்ளது. இதில், முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விராட் கோலி விளையாடாமல் போனது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.

BCCI தகவல்
இந்நிலையில், மூன்றாவது போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா என்ற சந்தேகம் இருந்தது. இதற்கு BCCI விளக்கம் அளித்துள்ளது.

அதில், “இந்திய அணிக்கு எப்போது திரும்ப வேண்டும் என்பது விராட் கோலிக்கு தெரியும். அவர் இன்னும் எந்த தகவலும் கொடுக்கவில்லை. ஆனால் அவர் எப்போது முடிவு செய்தாலும் இந்திய அணியில் இடம் இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டது.

டெஸ்ட் தொடரில் விராட் கோலி இல்லாதது ரசிகர்களுக்கு கவலை அளித்துள்ளது. இதனிடையே, விராட் கோலியின் மனைவி கர்ப்பமாக இருப்பதால் தான் அவர் விளையாடவில்லை எனவும் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

SHARE