இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ள 5 எலெக்ட்ரிக் கார்களை பற்றி பார்க்கலாம்.
1. டாடா கர்வ்வ் ஈவி (Tata Curvv EV)
டாடா நிறுவனத்தின் Tata Curvv EV கார் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
வரவிருக்கும் இந்த மாடல் Punch EV-உடன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அதே EV platform-ல் ஆதரிக்கப்படும்.
இது 4,308mm நீளம், 1,810mm அகலம், 1,630mm உயரம் மற்றும் 2,560mm Wheelbase, 422 liters of boot space கொண்டிருக்கும்.
டாடாவின் Curvv Electric SUV-ஐ ஒருமுறை Charge செய்தால் 400km முதல் 500km தூரம் வரை Mileage கொடுக்க கூடியதாக அறிமுகமாகும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
2.டாடா ஹாரியர் ஈ.வி (Tata Harrier EV)
பாரத் மொபிலிட்டி ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட Harrier EV, கடந்த ஆண்டு Auto Expo-ல் அறிமுகமானது.
Gen 2 EV Architecture-ல் Build செய்யப்பட்ட Harrier EV ஆனது V2L மற்றும் V2V Charging வசதிகளுடன் வரும்.
அடுத்த சில மாதங்களில் அறிமுகமாக உள்ள Harrier Electric version சமீபத்தில் சாலைகளில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த Electric SUV-யின் Range, செயல்திறன் மற்றும் அம்சங்கள் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
3. மாருதி சுசுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki EVX)
மாருதி சுசுகிக்கு இந்த 2024-ல் தனது முதல் Electric car eVX-ஐ உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற Auto Expo-ல் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்ட eVX Electric SUV ஆனது, அடுத்த ஆண்டு முதல் ஹன்சல்பூரில் உள்ள சுசுகி மோட்டரின் குஜராத் ஆலையில் தயாரிக்கப்படும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் இதன் அறிமுகம் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த Electric SUV ஒருமுறை Charge செய்தால் சுமார் 550km தூரம் வரை செல்லும். இதில் 60kWh Lithium ion battery pack பொருத்தப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
4. மஹிந்திரா எக்ஸ்யூவி.இ8 (Mahindra XUV.E8)
மஹிந்திரா XUV.e8 இந்நிறுவனத்தின் இரண்டாவது Electric car- ஆக நாட்டில் அறிமுகமாகும்.
Born Electric Brand-ன் கீழ் வெளியிடப்பட உள்ள புதிய XUV.e8 Dual electric motor மற்றும் All-wheel drive technology உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் நிறுவனம் குறைந்தப்பட்சம் 60kWh Battery Pack-ஐ வழங்க வாய்ப்புள்ளது, மேலும் Level 2 ADAS, 5G Connectivity போன்ற அம்சங்களையும் கொடுக்கப்பட்டுள்ளன.
5. ஸ்கோடா என்யாக் (Skoda Enyaq)
இந்த ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் Enyaq அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது 282bhp என்ற அளவிலான அதிகப்பட்ச ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய rear axle பொருத்தப்பட்ட Single electric motor உடன் வருகிறது.
மேலும் இது 0-100km வேகத்தை 6.7 வினாடிகளில் எட்டிவிடும். இதில் 82kWh Unit battery pack கொடுக்கப்படும்.
இதனை 10 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் Charge செய்ய 28 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஒரு முறை முழுமையாக Charge செய்தால் 565km தூரம் வரை செல்ல கூடிய Range-ஐ கொண்டிருக்கும்.