ஹோண்டா நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டரான Honda Stylo 160 Scooter -யை அறிமுகம் செய்துள்ளது.
Honda Stylo 160 Scooter
ஜப்பான் நிறுவனமான Honda தனது புதிய மாடல் ஸ்கூட்டரான Honda Stylo 160 Scooter -யை அறிமுகப்படுத்தியுள்ளது.
தொழில்நுட்பம் மற்றும் அம்சங்களுடன் இந்த 160cc பைக்கை ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு இந்த பைக் பிடிக்கும். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனம் இந்த பைக்கை ஆரம்பத்தில் இந்தோனேஷியாவில் அறிமுகப்படுத்தியது. மேலும், இது பல்வேறு விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது. கருப்பு, பழுப்பு நிறங்களில் பைக்கின் பாடி மற்றும் சீட் உள்ளது. LED lights, digital display, USB charging போன்ற அம்சங்கள் இந்த பைக்கில் உள்ளது.
குறிப்பாக, சாவியில்லாமல் மிகுந்த பாதுகாப்புடன் ஆன் செய்வது தான் இன்னும் நெருக்கமாக்கியுள்ளது Honda Stylo 160 Scooter -ல் 160cc சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு எஞ்சின் இருப்பதால் 16bhp உச்ச சக்தி மற்றும் 15Nm முறுக்குவிசையையும் வழங்கும்.
இந்த பைக்கானது நீண்ட தூர பயணத்திற்கும், போக்குவரத்து நெருக்கடிக்கும் உகந்ததாக இருக்கும். Honda நிறுவனம் இந்த பைக்கை இந்திய சந்தை உள்பட பல சந்தைகளில் வருங்காலத்தில் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.