சிரிப்பு இது இப்போது உள்ள மக்களுக்கு ஒரு ஆச்சரியமான விஷயமாக உள்ளது.
இப்போது உள்ள அன்றாட சூழலில் வேலைக்கு செல்வது, வீட்டிற்கு வருவது என மக்கள் எல்லோருமே ஒரு வரண்டு போன வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு இடையில் சிலர் சிரிக்கிறார்கள் என்றால் அதற்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தான்.
அப்படி கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் காமெடி செய்து இப்போது மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்திருப்பவர் தான் பாலா. தற்போது இவர் தான் சம்பாதித்த பணத்தை வைத்து ஆம்புலன்ஸ்கள் வாங்கி கொடுத்து வருகிறார்.
அவர் உதவி செய்வதற்கு கூட சிலர் மோசமான விமர்சனம் செய்து வந்தாலும் பலர் அவர் செய்யும் நல்ல காரியத்திற்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
அம்மாவின் பேச்சு
பாலாவின் தாயார் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
அப்போது பாலாவை பற்றி பேசும்போது, இவர் 10வது 500/ 490 மதிப்பெண் எடுத்தான். முதல் குரூப் எடுக்க வைத்து டாக்டர் ஆக்கலாம் என்று நினைத்தால் அவர் நடிகன் ஆகிவிட்டான் என ரைமிங்கில் பெருமையாக கூறியுள்ளார்.