பணம், தங்கத்தை திரும்ப கொடுக்கவில்லை! ஆனால்.. இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளையடித்த திருடர்களின் மன்னிப்பு கடிதம்

80

 

கடைசி விவசாயி, காக்கா முட்டை போன்ற படங்களை இயக்கிவர் இயக்குனர் மணிகண்டன். இவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்தவர் ஆவர்.

மணிகண்டன் சென்னையில் படத்தின் வேலைக்காக குடும்பத்துடன் இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டில் பூட்டை உடைத்து சில மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த இந்த கொள்ளையில், 5 பவுன் தங்க நகையும், ரூ. 1 லட்சம் பணமும் மற்றும் தேசிய விருதுக்காக மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட இரண்டு வெள்ளி பதக்கங்களும் திருப்பட்டுள்ளது.

மன்னிப்பு கடிதம்
இந்நிலையில், நேற்று திருடப்பட்ட தேசிய விருதுக்காக மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட வெள்ளி பதக்கங்களை மட்டும் திருப்பி கொடுத்துள்ளனர். அதுவும் எப்படி தெரியுமா, செய்த தவறுக்காக மன்னிப்பு கடிதம் எழுதி அதை கொள்ளையடித்த பதக்கத்தை பை ஒன்றில் கொள்ளையர்கள் தொங்கவிட்டு சென்றுள்ளனர்.

அந்த கடிதத்தில் ‘அய்யா எங்களை மன்னித்து விடுங்கள், உங்கள் உழைப்பு உங்களுக்கு’ என எழுதியுள்ளனர். இந்த விஷயம் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

SHARE