சர்க்கரை நிலவே, அழகிய தீயே என பல ஹிட் பாடல்கள் பாடிய ஹரிஷ் ராகவேந்திரா இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?

82

 

தமிழ் சினிமாவில் படங்கள் எந்த அளவிற்கு ரசிகர்களால் கொண்டாடப்படுகிறதோ அதேபோல் பாடல்களும் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.

இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் என நிறைய இசையமைப்பாளர்கள் வர பாடகர்களும் அதிகமாகி வந்தார்கள்.

அப்படி தேவதையை கண்டேன், சர்க்கரை நிலவே, மெல்லினமே மெல்லினமே என நிறைய ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தான் பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா.

பாடகராக தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழி படங்களில் பாடியிருக்கிறார். அதோடு அஜித் நடித்த திருப்பதி படத்தில் அவருக்கு அண்ணன் வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

லேட்டஸ்ட்
இவர் இப்போது சினிமாவில் அதிகம் பாடவில்லை என்றாலும் நிறைய இசைக் கச்சேரிகளில் பாடி வருகிறார். அதோடு ஆளே ஹேர் ஸ்டைல் எல்லாம் மாற்றியிருக்கிறார்.

SHARE