கன்னடத்தில் நடிகையாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். இதன்பின் தெலுங்கு திரையுலகம் பக்கம் கவனம் செலுத்த துவங்கினார். தெலுங்கில் இவர் நடித்த முதல் படமே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
படங்கள்
இதை தொடர்ந்து தெலுங்கில் சில திரைப்படங்களை நடித்த வந்த பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.
டாக்டர் வெற்றியை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான் ஆகிய படங்களில் நடித்து வந்தார். மேலும் கடந்த மாதம் வெளிவந்த தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் இதுவரை எந்த படத்திலும் செய்யாத ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் OG படத்தில் நடித்து வருகிறார். அதே போல் தமிழில் ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
சொத்து மதிப்பு
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் நடிகை பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு 2 மில்லியன் டாலர்கள் இருக்குமாம். இதன் இந்திய மதிப்பு ரூ. 17 கோடி ஆகும். கதாநாயகியாக நடிக்க ஒரு படத்திற்கு ரூ. 1 கோடி வரை பிரியங்கா மோகன் சம்பளம் வாங்கி வருகிறாராம்.