இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான லால் சலாம் திரைப்படம் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.
விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடித்துள்ள இப்படத்தில், சிறப்பு தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். மேலும் கெஸ்ட் ரோலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நடித்திருக்கிறார்.
சம்பளம்
பிரமாண்டமாக வெளியான லால் சலாம் படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த படத்திற்காக நடிகர் விக்ராந்த் ரூ.70 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.