சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு கடந்த சில வருடங்களாக ஏகப்பட்ட பிரபலங்கள் வருகிறார்கள், வெற்றியும் பெறுகின்றனர்.
சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர் என இப்படி பல பிரபலங்களை கூறிக்கொண்டே போகலாம்.
அந்த லிஸ்டில் இணைந்தவர் தான் கவின். சரவணன் மீனாட்சி தொடரில் நாயகனாக நடித்து மக்களின் ஆதரவை பெற்றவர் பிக்பாஸிலும் கலந்துகொண்டார்.
ஆனால் நிகழ்ச்சி மூலம் கவின் மக்களின் வெறுப்பை பெற்றார். ஆனால் அந்த இமேஜை போக்கும் அளவிற்கு டாடா என்ற படம் அவருக்கு பெரிய வளர்ச்சியை தேடிக்கொடுத்துள்ளது.
புதிய படம்
வெற்றிமாறன் படங்களை இயக்குவதை தாண்டி நிறைய படங்களை தயாரித்தும் வருகிறார். அப்படி அடுத்து விக்ரனன் அசோகன் என்பவர் இயக்கும் புதிய படத்தை தயாரிக்க இருக்கிறாராம்.
நயன்தாரா, கவின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்களாம். விரைவில் இப்படத்திற்கான அறிவிப்புகள் வெளிவரும் என கூறப்படுகிறது.