பெரு நாட்டில் அண்மையில் சந்தேக நபர்களை பொலிஸார் வினோதமான முறையில் கைது செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
காதலர் தினத்தன்று டெடிபெயாரை போல் உடுத்திக் கொண்டு ப்ரபோஸ் செய்யும் நோக்கில் சென்று பலரை பொலிஸார் பலரை கைதுசெய்துள்ளனர்.
மேலும், குறித்த வித்தியாசமான சுற்றிவளைப்பின் போது, பெருந்தொகையான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பெரு நாட்டின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும், இதன் மூலம் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டமையானது பாராட்டத்தக்கது என பொலிஸ் உயர் அதிகாரிகளும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த கிறிஸ்மஸ் தினத்தன்று குற்றவாளிகளை பிடிக்க இதே போன்ற தந்திரம் பயன்படுத்தப்பட்டதாகவும், அங்கு அதிகாரி ஒருவர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு சந்தேக நபர்களை கைது செய்தமையும் குறிப்பிடத்தக்கது.