இயற்கை பட புகழ் நடிகை ராதிகாவா இது, யாரை 2ம் திருமணம் செய்துள்ளார் பாருங்க- குடும்ப போட்டோ

89

 

தமிழ் சினிமாவில் ராதிகா என்றதும் அந்த நடிகை நியாபகம் வந்துவிடுவார், ஆனால் இந்த ராதிகா வேறுயாரும் இல்லை இயற்கை என்ற படத்தில் நடித்தவர் தான்.

2002ம் ஆண்டு ராதிகா கன்னடத்தில் Ninagagi என்ற படத்தின் மூலம் நடிக்க தொடங்கியுள்ளார். அதன்பிறகு தொடர்ந்து 8 படங்கள் கன்னடத்திலேயே நடிக்க 10வது படம் தமிழில் நடித்தார்.

பின் சில தமிழ் படங்கள் நடித்தவர் ஒரு தெலுங்கு படமும் நடித்துள்ளார். ஆனால் அதிகம் நடித்திருப்பது கன்னட படங்களில் தான். 2017ம் ஆண்டு ஒரு நடன நிகழ்ச்சியின் நடுவராக இருந்தவர் 2 படங்களை தயாரித்தும் உள்ளார்.

திருமணம்
ராதிகாவிற்கு 2000ம் ஆண்டு 13 வயதிலேயே ரதன் குமார் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. பின் ராதிகாவின் கணவர் நிறைய பிரச்சனைகள் கொடுக்க பிரிந்தார். ரதன் குமாரும் கடந்த ஆகஸ்ட் 2002ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

பின் ராதிகா 2010ம் ஆண்டு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி என்பவரை திருமணம் செய்துகொண்டதாக அறிவித்தார்.

இவர்களின் திருமணம் 2006ம் ஆண்டே நடந்துள்ளது, ஷமிகா என்ற மகளும் உள்ளார். தற்போது ராதிகா ரூ. 124 கோடி சொத்துக்கு எஜமானியாக திகழ்ந்து வருகிறார்.

SHARE