நடிகை ராதிகா சரத்குமார் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாவர். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு படத்தை பற்றிய விமர்சனத்தை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்த பதிவில் அந்த படத்தை குறித்து கடுமையாக கூறியிருந்தார் ராதிகா. ஆனால், அவர் அது எந்த படம் என குறிப்பிடவில்லை. அவர் குறிப்பிடவில்லை என்றாலும் கூட, ராதிகா கூறியது அனிமல் படத்தை பற்றி தான் என ரசிகர்கள் பலரும் கூறுகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது காதல் கணவர் நடிகர் சரத்குமாருடன் நடிகை ராதிகா கலந்துகொண்டார். அதில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட ராதிகா, அப்படம் குறித்த தனது பதிவு குறித்தும் பேசினார்.
கடுப்பான ராதிகா
அப்போது ‘அதே பத்தி பேசாதீங்க, ரெண்டு நாள் புலம்பிட்டேன்’ என கூறினார். இதற்கு சரத்குமார் ‘இது ராதிகாவுடைய கருத்து, ஆனால், சிலர் அப்படத்தை வேற மாதிரி நினைக்கிறாங்க. அதை வித்தியாசமாக பார்க்கிறார்கள், அது எனக்கு புரியவில்லை. என கூறினார். இதற்கு பதில் கொடுத்த ராதிகா ‘perversion மற்றும் குப்பை’ என கூறினார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.