திடீரென விலை குறைந்த OnePlus Pad…, இது தவிர வேறு சில சலுகைகளும் அறிவிப்பு

126

 

OnePlus நிறுவனம் கடந்த ஆண்டில் அறிமுகம் செய்த OnePlus Pad என்ற Tablet சாதனம் மீது திடீரெனெ விலை குறைப்பு (Price drop) அறிவிக்கப்பட்டுள்ளது.

OnePlus Pad விலை குறைப்பு
கடந்த 2023 -ம் ஆண்டில் பலருக்கும் பிடித்த டேப்களில் ஒன்றாக திகழ்ந்த சாதனத்திற்கு தான் விலைகுறைப்பு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இது best android tablet device ஆகும். 2023 -ம் ஆண்டு ஓக்டோபர் மாதம் OnePlus நிறுவனம் தனது OnePlus Pad Go எடிஷனை அறிமுகம் செய்தது.

இந்த Tablet சாதனம் மலிவு விலையாக அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், மக்களின் கவனத்தை ஈர்த்த சாதனம் என்பதில் OnePlus Pad சாதனம் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

OnePlus நிறுவனம் தனது OnePlus Pad மீது முழுமையாக ரூ.1,500 விலை குறைப்பை அறிவித்துள்ளது. இந்த OnePlus Pad இரண்டு வேரியண்ட்களில் வருகிறது.

அதன்படி, 8GB மற்றும் 128GB மாடலின் அசல் விலையான ரூ.37,999 -லிருந்து ரூ.36,499 விலைக்கு குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல 12GB மற்றும் 256GB ஸ்டோரேஜ் மாடலின் அசல் விலையான ரூ.39,999 -லிருந்து ரூ.38,499 விலைக்கு குறைக்கப்பட்டுள்ளது.

அதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட Credit card மற்றும் வங்கி பயனர்களுக்கு ரூ.3,000 உடனடி தள்ளுபடியை வழங்குகிறது. இதன்படி பார்த்தால் 8GB மற்றும் 128GB மாடலின் மாடலின் விலையை ரூ. 33,499 ஆகக் குறைத்துள்ளது. இதனை நாம் Amazon, Flipkart மற்றும் OnePlus அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விலை குறைவாக வாங்கலாம்.

SHARE