உணவுக்காக வரிசையில் காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு: அதிர்ச்சி சம்பவம்

83

 

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் 4 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த போர் காரணமாக உணவு, தண்ணீர் மருந்து உள்ளிட்டவை கிடைக்காமல் காசா மக்கள் தவித்து வருகிறார்கள்.

இவ்வாறான நிலையில், வடக்கு காசாவில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்கள் உணவை வாங்குவதற்காக வரிசையில் காத்து கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் மீது திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் மக்கள் அலறியடித்தபடி ஓடினர். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், சிறுவர்கள் உள்பட பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு, நோய் ஆகியவற்றால் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என ஐ.நா. எச்சரித்துள்ளது.

SHARE