திரையுலகில் 20 ஆண்டுகளாக பயணித்து வரும் நடிகை திரிஷா, கடைசியாக விஜய்யின் லியோ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து தற்போது அஜித்தின் விடாமுயற்சி, கமலின் தக் லைஃப் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
திரிஷா தனது வாழ்க்கையில் எடுத்த சிறந்த முடிவுகள் 96 மற்றும் பொன்னியின் செல்வன் படங்களில் நடிப்பது தான். ஏனென்றால் இந்த படங்களுக்கு முன் அவருக்கு பெரிதளவில் பட வாய்ப்பு இல்லை. ஆனால், 96 மற்றும் பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் இருந்து திரிஷாவிற்கு பட வாய்ப்புகள் குவித்து வருகிறது.
இன்று தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தனது ஆரம்பகால கட்டத்தில் சில படங்கள் தோல்வியை சந்தித்ததன் காரணமாக, சினிமாவில் இருந்து விலகி விடலாம் என்கிற மோசமான முடிவை எடுத்துள்ளாராம். அப்போது தான் இவரை தேடி சாமி படத்தின் வாய்ப்பு வந்துள்ளது.
காப்பாற்றிய சாமி
விக்ரம் நடிப்பில் வெளிவந்த சாமி படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். அப்போது சாமி படம் வெற்றியடைந்தால் சினிமாவில் தொடர்ந்து இருக்கலாம், இப்படம் தோல்வியை தழுவினால், சினிமாவிற்கு ஒரு பெரிய கும்பிட்டு போட்டுவிட்டு சென்றுவிடலாம் என முடிவு எடுத்துள்ளார்.
படம் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இதில் குறிப்பாக திரிஷாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து, ரசிகர்கள் பட்டாளமும் சேர்ந்தது. இதன்பின் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்க துவங்கினார் திரிஷா.