தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என ஆசைப்பட்ட முக்கியமான நபர் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா. ஆம், ஜெயலலிதாவிற்கு அஜித்தை அரசியலுக்கு வரவைக்க வேண்டும் என ஆசை இருந்ததாம்.
தனக்கு பின் தன்னுடைய இடத்திற்கு அஜித் தான் வரவேண்டும் என்று ஜெயலலிதா நினைத்ததாக பல பத்திரிகையாளர்கள் கூறியுள்ளார். அஜித்தின் நண்பர் மறைந்த வெற்றி துரைசாமியின் திருமணத்திற்கு சென்று கொண்டிருந்த ஜெயலலிதா, அஜித்தை பார்த்தவுடன் தனது கான்வாயை விட்டுக் கீழே இறங்கி நலம் விசாரித்துள்ளார். வேறு யாருக்காகவும் ஜெயலலிதா இப்படி செய்ததே இல்லை.
கரு. பழனியப்பன் கேள்வி
இந்நிலையில், பிரபல இயக்குனரும், நடிகருமான கரு. பழனியப்பன் பிரபல பத்திரிகை ஒன்றில் அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என கூறி, அஜித் – ஜெயலலிதா குறித்து கட்டுரை ஒன்று எழுதியுள்ளார்.
மேலும் திரையுலகில் சக போட்டியாளர்கள் கண்டிப்பாக வேண்டும் என்றும் கூறியுள்ளார். அப்படி உங்களுடைய சக போட்டியாளரான விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். அவர் ஓடும் திசையை நோக்கி நீங்களும் ஓட போகிறீர்களா? அல்லது உங்களுக்கு போட்டியாக புதிய விஜய்யை தயார் செய்ய போகிறீர்களா என கேட்டுள்ளார். இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.