சினிமாவில் சாதிக்க துடிக்கும் பலருக்கும் எடுத்த உடனே வாய்ப்புகள் கிடைப்பதில்லை, நிறைய போராட்டங்களுக்கு பிறகு தான் அவர்களின் வேலைக்கு அங்கீகாரம் கிடைக்கிறது.
பிளாக் அன் ஒயிட் காலத்தில் இருந்தே காமெடியனாக கலக்கி ரஜினி, கமல், சிம்பு காலம் வரை படங்கள் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் நாகேஷ்.
தனது படைப்பின் மூலம் மக்களை சிரிக்க வைத்த இந்த கலைஞன் இருந்த போது சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது பல ரசிகர்களின் வேதனையாக உள்ளது என்றே கூறலாம்.
தற்போது இவர் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் கவுண்டமணி நடித்துள்ள விஷயம் வைரலாகி வருகிறது.
எந்த படம்
காமெடியனாக கலக்கிவந்த நடிகர் நாகேஷ் அவர்கள் நாயகனாக நடித்த திரைப்படம் சர்வர் சுந்தரம்.
கடந்த 1964ம் ஆண்டு வெளியான இப்படத்தை ஏ.வி.எம் நிறுவனம் தயாரிக்க கே.பாலசந்திர் திரைக்கதை அமைக்க கிருஷ்ணன் பஞ்சு இயக்கி இருந்தார். இந்த படத்தில் நாகேஷுடன் நடிகர் கவுண்டமணி ஒரு சிறுவேடத்தில் நடித்திருப்பார்.
இளமை காலத்தில் கவுண்டமணி தோன்றும் காட்சியின் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.