நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் ஒரு இளம் பிரபலம்.
2000ம் ஆண்டு பைலட்ஸ், 2001ம் ஆண்டு அச்சனே எனக்கு இஷ்டம், 2002ம் ஆண்டு குபேரன் ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் நடித்துள்ளார்.
பின் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் படம் மூலம் என்ட்ரி கொடுத்தார், ஆனால் இப்படத்திற்கு ரீச் இல்லை. பின் 2016ம் ஆண்டு சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் படம் நடித்த இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டார்.
அப்படத்தை தொடர்ந்து தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சண்டக்கோழி 2 என படங்கள் நடிக்க கடைசியாக இவரது நடிப்பில் ஜெயம் ரவியுடன் நடித்த சைரன் திரைப்படம் வெளியாகி இருந்தது.
நடிகையின் பாட்டி
கீர்த்தி சுரேஷ் அப்பா ஒரு தயாரிப்பாளர், அவரது அம்மா மேனகாவும் ஒரு நடிகை தான். அவரது பாட்டி சரோஜாவும் நடிகை தானாம்.
நடிகர் கார்த்தி நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் கீர்த்தி சுரேஷ் பாட்டி சரோஜா நடித்துள்ளார். இதோ படத்தி இடம்பெற்ற அவரது புகைப்படம்,