பல எதிர்ப்பார்ப்புடன் வெளியான சைரன் திரைப்படம் ஜெயம் ரவிக்கு கைகொடுத்ததா?- முழு பாக்ஸ் ஆபிஸ்

70

 

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, சமுத்திரக்கனி என பலர் நடிக்க கடந்த பிப்ரவரி 16ம் தேதி வெளியான திரைப்படம் சைரன்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் மற்றும் இறைவன் படங்கள் வெளியாகி இருந்தது. ஆனால் படங்கள் எதுவும் சரியாக போகவில்லை, பாக்ஸ் ஆபிஸிலும் தோற்றது

இதனால் சைரன் திரைப்படத்தின் மேல் பெரிய நம்பிக்கை இருந்தது, நல்ல புரொமோஷனும் செய்திருந்தார்கள்.

ஆக்ஷன் ப்ளஸ் த்ரில்லர் கதையாக வெளியான இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்தாலும் சுமாரான கலெக்ஷனை தான் பெற்று வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்
சைரன் திரைப்படம் வெளியாகி 5 நாள் ஆகிவிட்டது, வார நாட்கள் என்பதால் படத்திற்கும் சரியான கூட்டம் இல்லை.

5 நாள் முடிவில் படம் ரூ. 8 கோடி வரை தான் வசூலித்துள்ளதாம், இது மிகவும் குறைவான வசூல் இப்படியே போனால் படம் நஷ்டம் அடையும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

SHARE