இனி வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்கவே கூடாது என்று கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் தண்ணீர் பாட்டிலுடன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
விமானத்தில் நடந்த சம்பவம்
சில வாரங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால், திரிபுராவில் நடந்த கர்நாடகா – திரிபுரா ரஞ்சி போட்டியில் பங்கேற்க சென்றார்.
பின்னர் அங்கிருந்து விமானத்தில் திரும்பிய போது தனக்கு முன்னாடி இருந்த பையில் உள்ள தண்ணீர் பாட்டிலை எடுத்து அருந்தியுள்ளார். ஆனால், அந்த தண்ணீரில் உயிரை பாதிக்க கூடிய ரசாயனம் இருந்துள்ளது.
இதன்பின்னர், அவருக்கு எரிச்சல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயிறு மற்றும் வாயின் உட்புறத்தில் காயம் ஏற்பட்டிருந்தது.
தனக்கு முன்பு அந்த தண்ணீர் பாட்டில் வந்தது குறித்து சந்தேகம் உள்ளதாக மயங்க் அகர்வால் பொலிஸில் புகார் அளித்துள்ளார். பின்னர், அதிலிருந்து மீண்டு ரஞ்சி ட்ராபி தொடரில் ஆடி வருகிறார்.
புகைப்படம் பகிர்வு:
அதற்காக மீண்டும் விமான பயணங்களை மயங்க் அகர்வால் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பிற பாட்டிலில் உள்ள தண்ணீரை குடிக்க போவதில்லை என்று வேடிக்கையாக புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “இனி வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்கவே கூடாது” என்ற வசனத்தை பதிவிட்டு தண்ணீர் பாட்டிலுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.