சூர்யாவிற்கு ஜோடியாகும் நடிகை ஜான்வி கபூரின் காதலர் இவர் தானா.. நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இதோ

72

 

பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நாயகி ஜான்வி கபூர். தனது தாய் மற்றும் தந்தையை போலவே சினிமாவில் தடம் பதித்துள்ளார். கண்டிப்பாக தனது தாய் ஸ்ரீதேவி போலவே மிகப்பெரிய நடிகையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடிக்கடி தன்னுடைய கிளாமர் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை கிறங்கடித்து வரும் ஜான்வி கபூர், தற்போது பாலிவுட் திரையுலகில் இருந்து தென்னிந்திய சினிமா பக்கம் வந்துள்ளார். ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக தேவரா எனும் திரைப்படத்தில் நடித்து வரும் இவர், அடுத்ததாக ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

இதுமட்டுமின்றி இந்தியில் சூர்யா நடிக்கவுள்ள கர்ணா படத்திலும் ஜான்வி கபூர் தான் கதாநாயகி என தகவல் வெளியாகியுள்ளது. குறுகிய காலகட்டத்திலேயே ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணையும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

ஜான்வி கபூரின் முன்னாள் காதலர்
இந்நிலையில், நடிகை ஜான்வி கபூரின் காதலர் என கிசுகிசுக்கப்பட்டவரின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இருவரும் நெருக்கமாக இருக்கும் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

SHARE