விஷால் நடித்த தாமிரபரணி படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் பானு.
அவர் அதற்கு பிறகு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்த நிலையில் 2015ல் ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார்.
அவ்வப்போது பானு மகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
ரீஎன்ட்ரி
இந்நிலையில் பானு பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆகி இருக்கிறார். அவர் மலையாளத்தில் குருவி பாப்பா என்ற படத்தில் நடித்து இருக்கிறார். வினீத் தான் அந்த படத்தில் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.