விலைக் கழிவுகளுக்காக காத்திருக்கும் கனடியர்கள்

65

 

கனடாவில் வாடிக்கையாளர்கள் விலைக் கழிவுகளை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னணி நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியல் அதிகளவான கனடியர்கள் விலைக் கழிவு அடிப்படையிலான கொள்வனவுகளில் நாட்டம் காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

லெஜர் நிறுவனததினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

நாட்டில் தற்போதைக்கு பொருட்களின் விலைகள் குறைவடையக் கூடும் என மக்கள் கருதவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.பணவீக்கத்தினால் பொருட்களின் விலைகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 64 வீதமான கனடியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மலிவு விற்பனை அல்லது விலைக் கழிவினை கருத்திற் கொண்ட கொள்வனவுகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடாவில் கடந்த ஆண்டில் மளிகைப் பொருட்களுக்கான பணவீக்கம் 11 வீதமாக காணப்பட்டதுடன் தற்பொழுது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு 3.4 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

SHARE