கனடாவில், ஒரே பயண இடத்திற்கு செல்லும் பயணிகள் செல்லும் ரைட் ஷெயார் (rideshare) வாகனம் என கருதி வேறும் வாகனத்தில் ஏறிய பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனது rideshare வாகனம் என நினைத்து குறித்த பெண் இனம் தெரியாதவரின் வாகனம் ஒன்றில் ஏறியுள்ளார்.
இதன் போது வாகனத்தில் இருந்தவர் குறித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விக்டோரியா பார்க் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகனத்தில் வீட்டிற்கு அருகாமையில் அழைத்து வந்ததாகவும் வீட்டிற்கு குறித்த பெண் நடந்து சென்ற போது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் 35 முதல் 45 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்படுகிறது.
டொயோட்டா கொரோலா வாகனம் ஒன்றில் வந்த நபர் ஒருவரே இந்த பாலியல் துஷ்பிரயோக குற்றச் செயலையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்க தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கு போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.