டாடா பட வெற்றி அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய நடிகர் கவின்- எவ்வளவு தெரியுமா?

65

 

தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகராக இருப்பவர் கவின். சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் அதன்பின் சின்ன சின்ன பிராஜக்ட் நடித்து வந்துள்ளார்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்துகொண்டார், அதில் கொஞ்சம் பெயரையும் கெடுத்துக்கொண்டார் என்றே கூறலாம். ஆனால் இன்னொரு பக்கம் படு லூட்டியும் அடித்தார்.

அந்நிகழ்ச்சிக்கு பிறகு கவின் நடித்த படம் லிஃப்ட், அப்படம் பெரிய அளவில் வரவேற்பும் பெற்றது. பின் கவின் டாடா என்ற ஒரு அற்புதமான கதையில் நடித்தார், திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடினார்கள், கவின் மார்க்கெட்டும் உயர்ந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் சுந்தர்.சி. இயக்கத்தில் கவின் கலகலப்பு 3 படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தன, ஆனால் இயக்குனர் தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது.

தற்போது கவின் நடிக்க இருக்கும் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்காக ரூ. 6 கோடி வரை சம்பளம் அவர் கேட்டிருப்பதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த சம்பள தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

 

SHARE