நியூயார்க் நகரில் , காசா முனையில் வசிக்கும் பாலஸ்தீன மக்களை வாழவிடுங்கள் என பதாகைகளை ஏந்தி அமெரிக்க வாழ் யூதர்கள் போராட்டம் நடத்தினர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரவாளர்கள் எனக் கருதப்படும் அவர்கள், காசாவில் நடக்கும் படுகொலையை நிறுத்த வேண்டும் என்றும் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.
பேரணியாக செல்ல முயன்றவர்களை போலீஸ் தடுத்ததால், யூதர்கள் ஓரிடத்தில் திரண்டு அமைதி வழியில் போராட்டம் நடத்தினர். காசாவில் அமைதி திரும்ப வேண்டி இசைக் கருவிகளை வாசித்து கவனத்தை ஈர்த்தனர்