தொலைக்காட்சியின் தலைவர் பதவி விலகல்: வெளிவந்துள்ள காரணம்

75

 

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி பிரசாத் சமரசிங்க பதவி விலகியுள்ள நிலையில், அரசியல் அழுத்தமே அவரது பதவி விலகலுக்கு காரணம் என்று கூறப்படுகின்றது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர், கடந்த 2023ஆம் ஆண்டின் ஒகஸ்ட் மாதத்தில், பிரசாத் சமரசிங்க, ரூபவாஹினிக் கூட்டுத்தாபன பணிப்பாளர் நாயகம் மற்றும் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், தற்போது அவர் குறித்த பதவிகளிலிருந்து விலகியுள்ளார்.

பதவி விலகலுக்கான காரணம்
அதேவேளை, அவரது பதவி விலகலுக்கான காரணம் இதுவரை வெளியிடப்படாத நிலையிலேயே, இவ்வாறு அரசியல் அழுத்தம் காரணமாக அவர் பதவி விலகியிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

SHARE