பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரிய நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள பர்கினோ பாசோ கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமையை பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது.
இதில் ஏராளமானோர் பங்கேற்றிருந்த நிலையில் திடீரென துப்பாக்கி ஏந்திய ஒரு கும்பல் தேவாலயத்திற்குள் நுழைந்தது. அவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.