அச்சு அசல் நடிகை மிருணாள் தாகூர் போலவே இருக்கும் அவரது அக்கா.. அவரும் சினிமாவில் தான் இருக்கிறார், இதோ பாருங்க

103

 

சீதா ராமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை மிருணாள் தாகூர். இதன்பின் நாணி நடிப்பில் வெளிவந்த hi நானா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் இவர், அடுத்ததாக சிம்புவின் 48வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.

சீரியல்கள் மூலம் தனது திரை பயணத்தை துவங்கிய மிருணாள் தாகூர், அதன்பின் மராத்தியில் உருவான திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். பின் ஹிந்திக்கு வந்தார். தற்போது படிப்படியாக உயர்ந்த இந்தியளவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் மட்டுமின்றி மார்க்கெட்டையும் உருவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிருணாள் தாகூரின் அக்கா
சென்சேஷனல் நடிகையாக இருக்கும் மிருணாள் தாகூரின் அக்கா லோச்சன் தாகூர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மிருணாள் தாகூரின் அக்கா லோச்சன் தாகூர் பிரபல ஒப்பனை கலைஞர் ஆவார். திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்களுக்கு இவர் ஒப்பனை கலைஞர் இருந்து வருகிறார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகை மிருணாள் தாகூர் தனது அக்கா லோச்சன் தாகூர் உடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களை பார்க்கும் பலரும், அக்கா – தங்கை இருவரும் அச்சு அசல் ஒரே மாதிரி இருக்காங்களே என கூறி வருகிறர்கள். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

SHARE