நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார். அவர் நடித்த பல்வேறு விமர்சனங்களை தாண்டி பெரிய வசூலை குவித்து இருக்கிறது.
ராஷ்மிகா அடுத்து பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். அவர் தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டா (VD) உடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டு வரும் தகவல் எல்லோருக்கும் தெரிந்தது தான்.
அவர்கள் அந்த செய்தியை இதுவரை மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை. இருப்பினும் அவர்கள் ஜோடியாக வெளிநாடுகளுக்கு ட்ரிப் சென்று வருவது புகைப்பட ஆதாரங்களுடன் அடிக்கடி வெளியாகி வைரல் ஆகின்றன. மேலும் இந்த மாதம் அவர்களுக்கு திருமணம் நடக்க இருக்கிறது என்றும் கிசுகிசு சமீபத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது.
உறுதி செய்த ராஷ்மிகா
இந்நிலையில் ராஷ்மிகா ரசிகர் ஒருவர் ட்விட்டரில் அவர் திருமணம் பற்றி ஒரு பதிவை போட்டிருக்கிறார். “ராஷ்மிகாவுக்கு VD போல ஒரு கணவர் வேண்டும். Very Daring” என குறிப்பிட்டு இருக்கிறார்.
அந்த பதிவுக்கு “That’s very true” என ராஷ்மிகா பதில் அளித்திருக்கிறார். அதனால் அவர் விஜய் தேவரகொண்டா உடன் காதலை மறைமுகமாக உறுதி செய்து இருக்கிறார்.