கனடாவில் நோயாளர் தரவுகளை அனுமதியின்றி பார்வையிட்ட மருத்துவருக்கு ஏற்பட்ட சிக்கல்

62

 

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

தேவையின்றி நோயாளர்களின் தகவ்லகளை பார்வையிட்டதாக மருத்துவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

டொக்டர் ஏஷ்லி ஜோன் மெர்காடோ என்பவரின் மருத்துவர் உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ மாகாணத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் கடமையாற்றிய போது நோயாளர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தொழில் ஒழுக்க நெறிகளை மீறியமைக்காக இவ்வாறு பணி இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கனடாவில் அனுமதியின்றி நோயாளர்களின் தகவல்களை பார்வையிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட ரீதியில் தனக்கு தெரிந்த 20 நோயாளர்களின் தகவல்களை அனுமதியின்றி இந்த மருத்துவர் பார்வையிட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

நோயாளர்களின் தனியுரிமைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் தகவல்களை பார்வையிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தொழில் ஒழுக்க நெறிகளை மீறியமைக்காக குறித்த மருத்துவரின் உரிமம் நான்கு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், ஒன்றாரியோ மருத்துவ மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர் கல்லூரிக்கு 6000 டொலர்கள் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

SHARE