திரிஷா தான் எனது மனைவி.. நடிகர் விஜய்யை மோசமாக திட்டிய சூர்யா

68

 

விஜய், திரிஷா, விக்ரம் போன்ற நட்சத்திரங்கள் குறித்து மோசமாக பேசிய பிரபலமானவர் AL சூர்யா. குறிப்பாக நடிகை திரிஷா தனது மனைவி என்று கூறிய பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதுமட்டுமின்று நடிகர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மோசமாக திட்டி பேசி வந்தார். மேலும் நடிகர் விக்ரம் விரைவில் மரணமடைந்துவிடுவார் என்று கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

இவர் கூறும் விஷயங்கள் ஷாக் கொடுக்கும் வகையிலும், சர்ச்சைக்குரிய வகையிலும் இருந்தாலும், ரசிகர்கள் பலரும், இவர் கூறும் விஷயங்கள் நகைச்சுவையாக மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள். குறிப்பாக இவர் பேசும் விதம் மீம் மெட்டீரியலாக மாறிவிட்டது.

விஜய்யை திட்டிய AL சூர்யா
இந்நிலையில், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய AL சூர்யா ‘தனக்கான விளம்பரத்தை தேடி கொள்ளத்தான் விஜய் அரசியலுக்கு வந்து இருக்கிறார். கொரோனா காலகட்டத்தில், வெள்ளத்தில் அவதிப்பட்டவர்களுக்கு விஜய் என்ன செய்தார். மக்கள் பணத்தில் கோடி கோடியாக சம்பாதித்த விஜய், மக்களுக்கு நன்மை செய்யவேண்டும். அதை செய்யவில்லை என்றால் உண்மை முகம் வெளியே வந்துவிடும்’ என பேசினார்.

தொடர்ந்து விஜய் குறித்து AL சூர்யா இப்படி பேசி வரும் நிலையில், விஜய்யின் ரசிகர்கள் இவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு நிவாரண உதவி செய்தார் விஜய் என கூறி சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

SHARE