ரஜினியின் அருகில் கையில் துப்பாக்கியுடன் இயக்குனர் அட்லீ.. எந்திரன் படத்தின் அன்ஸீன் காட்சி

71

 

இந்தியளவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் அட்லீ. ஜவான் படத்தின் வெற்றிக்கு பின் இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன் கைகோர்க்க போவதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் ஹாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்துள்ளதாக அட்லீ பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் அட்லீயின் அடுத்த படம் யாருடன் என்று.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. அதுவும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான எந்திரன் திரைப்படத்தில் தான், துணை இயக்குனராக பணியாற்றினார்.

ரஜினியுடன் அட்லீ
இந்நிலையில், எந்திரன் படத்தில் வரும் காட்சி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு நிற்கும் அட்லீயின் புகைப்படம் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

SHARE