கோல் மழை பொழிந்த இளம் வீரர்! ஒரு போட்டியில் 5 கோல்கள்..அதிர்ந்த மைதானம்

97

 

மான்செஸ்டர் சிட்டி வீரர் எர்லிங் ஹாலண்ட் 5 கோல்கள் அடித்து 54 ஆண்டுகால சாதனையை சமன் செய்தார்.

5 கோல்கள்
FA Cup தொடரின் லுடன் டவுன் அணிக்கு எதிரான போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி மோதியது. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் மான்செஸ்டர் சிட்டி (Manchester City) அணி 6-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

மான்செஸ்டர் சிட்டி அணியின் இளம் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland) 5 கோல்கள் அடித்தார். அதில் முதல் 4 கோல்கள் அடிக்க கெவின் டி புருனேவின் (Kevin De Bruyne) பாஸ் உதவியது.

54 ஆண்டு சாதனை
இந்த நிலையில் எர்லிங் ஹாலண்ட் 5 கோல்கள் அடித்ததன் மூலம், 54 ஆண்டுகளுக்கு பின்னர் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக 5 கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை சமன் செய்துள்ளார்.

1970ஆம் ஆண்டு ஜார்ஜ் பெஸ்ட் நார்த்தாம்டன் அணிக்கு எதிராக 6 கோல்கள் அடித்திருந்தார். அப்போட்டியில் மான்செஸ்டர் சிட்டி 8-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றியின் மூலம் காலிறுதிக்கு தகுதிபெற்றது. மார்ச் 16ஆம் திகதி நடைபெற உள்ள போட்டியில் நியூகேஸல் அணியை மான்செஸ்டர் சிட்டி எதிர்கொள்கிறது.

SHARE