குறைந்த விலையில் Samsung Galaxy A15 5G Smartphone: விலை, சிறப்பம்சங்கள் இதோ

109

 

Samsung நிறுவனம் தனது Galaxy A15 5G Smartphone 6 GB RAM, 128 GB Memory வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

முன்னதாக இந்த Smartphone 8 GB RAM, 128 GB Memory மற்றும் 8 GB RAM, 256 GB Memory என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது.

Samsung Galaxy A15 5G Smartphone-ன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதன் சிறப்பம்சங்கள்
Galaxy A15 5G மாடலில் Octa core MediaTek Dementia 6100 Plus processor, 5000 mAh Battery, 25 watt charging வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 6.5 Inch Full HD Plus1080x2408 Pixel Super AMOLED Display, 90Hz Refresh rate வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 50MP primary camera, 5MP lens, 2MP sensor மற்றும் 13MP Selfie camera வழங்கப்பட்டு இருக்கிறது.

Connectivity-க்கு 5G, Wi-Fi, Bluetooth, GPS, 3.5mm headphone jack, USB Type C port உள்ளது.

இதர சென்சார்களாக Accelerometer, Gyro Sensor, Geo-Magnetic Sensor, Virtual Proximity Sensor உள்ளது.இத்துடன் Fingerprint sensor வழங்கப்படுகிறது. இந்த Smartphone-ல் Androi 13 சார்ந்த One UI 5 வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் Samsung Galaxy A15 5G Smartphone Blue Black மற்றும் Light blue நிறங்களில் கிடைக்கிறது.

இந்த Smartphone-க்கு 5 ஆண்டுகள் Security update, 4 ஆண்டுகளுக்கு OS Updates வழங்குவதாக Samsung அறிவித்துள்ளது.

இதன் விலை
Galaxy A15 5G 6 GB RAM, 128 GB Memory- ரூ. 17,999

Galaxy A15 5G 8 GB RAM, 128 GB Memory- ரூ. 19,499

Galaxy A15 5G 8 GB RAM, 256 GB Memory ரூ. 22,499

SHARE