Google Doodle: பிப்ரவரி 29ம் திகதியை கொண்டாடும் கூகுள்

106

 

இன்று பிப்ரவரி 29ம் திகதி, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் லீப் தினத்தை கொண்டாடும் வகையில் டூடுலை வெளியிட்டுள்ளது கூகுள்.

ஒரு வருடத்தில் பூமி சூரியனை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரம் 365 நாட்கள், 5 மணிநேரம், 48 நிமிடங்கள் மற்றும் 46 வினாடிகள்.

365 நாட்களை தவிர்த்த மற்ற மணிநேரம், நிமிடங்கள், வினாடிகளை நான்கால் பெருக்கினால் ஒரு நாள் வரும், இதையே லீப் நாள் என குறிப்பிடுகிறார்கள்.

அதாவது நான்காண்டுகளுக்கு ஒருமுறை பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வரும், இந்த ஆண்டு 2024ல் லீப் நாள் வந்திருக்கிறது.

இதை கொண்டாடும் விதமாக கூகுள் சிறப்பான டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது, பிப்ரவரி 28க்கும் மார்ச் 1ம் திகதிக்கும் இடையே பிப்ரவரி 29ல் தவளையின் படம் இருக்கிறது, இது தாவி வந்து அமர்ந்து சிரிப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது, அப்படி செல்லும் போது பிப்ரவரி 29 மறைந்துவிடுகிறது, இது ஒரு குளத்தின் பின்னணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE