அசத்தல் வசதிகளுடன் அறிமுகமாகிய Galaxy S6 Edge plus (வீடியோ இணைப்பு)

427
ஸ்மார்ட்போன்களின் சந்தையில் சாம்சுங் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட முன்னணியில் உள்ளது என்றே கூறலாம்.இந்நிலையில் மற்ற நிறுவனங்கள் சந்தையை கைப்பற்றும் போட்டியில் வேகமாக முன்னேற அதற்கு தக்க பதிலடியாக தனது Galaxy S6 Edge plus கைப்பேசியைஅறிமுகம் செய்துள்ளது.பிரமாண்டமான 5.7 இன்ச் தொடுதிரையுடன் அறிமுகமாகியுள்ள இந்த கைப்பேசி மேலும் பல வசதிகளுடன் களமிறங்கியுள்ளது.இதன் 4 ஜிபி ராம் மூலம் பல்வேறு அப்ளிகேசனையும் கண்ணிமைக்கு வேகத்தில் நாம் இயக்க முடியும்.

ஆண்ட்ராய்ட் 5.1(Lollipop) வசதியும் இதற்கு துணை புரிகிறது. மேலும் இதன் 16 மெகாபிக்சல் பின்பக்க கமெரா மூலம் துள்ளியமான காட்சிகளை பெறலாம்.

செல்பிக்கு என்றே 5 மெகாபிக்சல் முன்பக்க கமெராவும் இணைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக 4k எனப்படும் மிக துள்ளியமான வீடியோக்களை நாம் எடுக்கமுடியும்.

மேலும் எடுத்த உடனேயே நொடிப்பொழுதில் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யும் வசதியும், அதிகமான புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை சேமிக்கும் வகையில் 32 ஜிபி மெமரியும் கைப்பேசியுடனேயே வழங்கப்பட்டுள்ளது.

இதன் விலை 57, 900 ரூபாய் ஆகும். Galaxy S6 Edge plus கைப்பேசி ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE