CSK அணிக்கு அதிர்ச்சி! IPL 2024 தொடரில் இருந்து வெளியேறும் முக்கிய வீரர்?

75

 

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக விளையாடும் நியூசிலாந்து வீரர் டேவன் கான்வே, நடப்பு 2024 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டேவன் கான்வே காயம்
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக விளையாடும் நியூசிலாந்து வீரர் டேவன் கான்வே, சமீபத்தில் விளையாடிய போட்டி ஒன்றின் போது அவருக்கு இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டது.

இந்த காயம் காரணமாக அவருக்கு இந்த வாரம் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

அத்துடன் அறுவை சிகிச்சை நிறைவடைந்த பிறகு குறைந்தது 8 வாரங்கள் டேவன் கான்வே குணமடைய தேவைப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், அவர் நடப்பு 2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.

CSKக்கு பின்னடைவா?
கான்வே காயம் பற்றிய விவரங்களை CSK அணி இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது கடினம் என்று கூறப்படுகிறது.

கான்வே CSK அணிக்கு முக்கியமான வீரர். அவர் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக ஓட்டங்களை குவிப்பதில் வல்லவர்.

கடந்த 2023 ஐபிஎல் தொடரில், கான்வே 17 போட்டிகளில் விளையாடி 462 ஓட்டங்களை குவித்தார். டேவன் கான்வே ஒருவேளை விளையாடாமல் போனால் CSK அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

SHARE