இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டியின் டிக்கெட் விலை ரூ.7 கோடி வரை விற்கப்படுகிறது.
உலக கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எந்தப் போட்டியும் ரசிகர்களுக்கு திருவிழாதான்.
நீண்ட கால போட்டியாளர்களான இந்தியாவும் பாகிஸ்தானும் எங்கு சந்தித்தாலும் அந்த மைதானம் இரு நாட்டு ரசிகர்களால் நிரம்பி வழியும்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் (ICC Men’s T20 World Cup 2024) சர்வதேச அரங்கில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் ஒருமுறை மோதுகின்றன.
இதனால் அந்த போட்டிக்கான டிக்கெட்டுகளுக்கு முழு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த டிக்கெட்டுகளை மறுவிற்பனை செய்யும் தளங்கள், ஒரு VIP Ticket-ன் விலை ரூ.1.4 கோடியாக நிர்ணயம் செய்துள்ளன. அதுமட்டுமன்றி, கூடுதல் கட்டணம் ரூ. 40 லட்சம் சேர்த்து மொத்த டிக்கெட் விலை ரூ. 1.8 கோடியாக நிர்ணயித்துள்ள.
ICC-யின் டிக்கெட் விலை
ஐசிசி ஏற்கனவே டி20 உலகக் கோப்பை டிக்கெட்டுகளை ballot மூலம் விற்பனை செய்து வருகிறது.
டிக்கெட்டுகளின் விலை 6 டாலர்களில் இருந்து 25 டொலர்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.497 மற்றும் அதிகபட்ச விலை ரூ.2,070.
இந்த சாளரத்தின் மூலம் ஐசிசி 2.60 லட்சம் டிக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்துள்ளது.
இணையதளத்தில் உள்நுழைந்த பிறகு ஒவ்வொருவரும் ஒரு போட்டிக்கு ஆறு டிக்கெட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஒருவர் எத்தனை போட்டிகளுக்கான டிக்கெட்டுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 7-ஆம் திகதி, ஆன்டிகுவா நேரப்படி 23:59 வரை டிக்கெட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆனால், இந்தியா vs பாகிஸ்தான் போன்ற போட்டிகளுக்கான சில டிக்கட்கள், அதிகாரப்பூர்வ விற்பனையின் போது மறைந்து, StubHub மற்றும் SeatGeek போன்ற மறுவிற்பனை தளங்களில் பல ஆயிரம் மடங்கு அதிக விலையில் மீண்டும் தோன்றும்.
இந்த டிக்கெட்டுகள் அவற்றின் அசல் விலையில் குறைந்தபட்சம் இருமடங்காக வழங்கப்படுகின்றன, சில ஆரம்ப விலைகளை அதிர வைக்கும் வித்தியாசத்தில் அதிகமாக உள்ளது.
இந்தியா Vs பாகிஸ்தான் VIP இருக்கைகள் $50,000ஐ தொடுகிறது
உதாரணமாக, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்தியா vs பாகிஸ்தான் ICC T20 உலகக் கோப்பை போட்டிக்கான VIP டிக்கெட்டுகளின் விலை $400 (INR 33 ஆயிரம்) (வரிகள் இல்லாமல்).
ஆனால், மறுவிற்பனை பிளாட்ஃபார்ம்களில், இதேபோன்ற இருக்கைகள் மனதைக் கவரும் $40,000 (INR 33 லட்சம்) க்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
அதுபோக,பிளாட்ஃபார்ம் கட்டணங்கள் மொத்தமாக $50,000 (INR 41 லட்சம்)-ஐ நெருங்குகிறது.
மறுவிற்பனை தளங்களில் மலிவான டிக்கெட் விலை எவ்வளவு?
இந்த மறுவிற்பனை தளங்களில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கான “மலிவான” மறுவிற்பனை டிக்கெட்டு கூட வாங்கக்கூடிய விலையில் இல்லை.
தற்போது StubHub-ல் மிக மலிவான டிக்கெட் $1,259 (INR 1.04 லட்சம்). அதேபோல் SeatGeek-ல், மிக மலிவான டிக்கெட் விலை $1,166 (INR 96k).
IND Vs PAK: T20 WC டிக்கெட் விலை ரூ. 1.8 கோடி
SeatGeek இல், மிகவும் விலையுயர்ந்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டி டிக்கெட்டின் அடிப்படை விலை $175,000 (INR 1.4 கோடி) ஆகும். அத்துடன், கூடுதல் கட்டணம் $50,000 (INR 41 லட்சம்) சேர்த்து மொத்தம் INR 1.86 கோடியை நெருங்குகிறது. இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூபா 7 கோடி ஆகும். இது மறுவிற்பனை சந்தையில் உச்சகட்ட விலையாகும்.
ஜூன் 9-ஆம் திகதி
டி20 உலகக் கோப்பை 2024: மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் மோகா போட்டி ஜூன் முதலாம் திகதி தொடங்குகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி ஜூன் 9ஆம் திகதி நியூயார்க்கில் நடைபெறவுள்ளது.